விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
திருவாலங்காடு--கனகம்மாசத்திரம் அடுத்த, ராமஞ்சேரியில், வலம்புரி சித்தி விநாயகர் கோவிலில், நுாதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.ராமஞ்சேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வலம்புரி சித்தி விநாயக பெருமானுக்கும், பரிவார தேவதையாய் அருள்பாலிக்கும் லஷ்மி, சரஸ்வதி, துர்கையம்மனுக்கும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.முன்னதாக சனிக்கிழமை கணபதி ஹோமம், வஷ்மி நவகக்ரிக ஹோமும், முதற்கால யாகபூஜையும் ஆரம்பமானது. அதை தொடர்ந்து நேற்று, காலை 9.30 மணிக்கு வேத விற்பன்னர்களின் மந்திரத்துடன் கலச புறப்பாடு நடைபெற்று, கோவில் விமானம் மற்றும் வலம்புரி சித்தி விநாயகருக்கு புனித நீரை ஊற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில், ராமஞ்சேரி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் 5,000 பேர் பங்கேற்றனர். கொரோனா நடைமுறை, சமூக இடைவெளியை மறந்து, பக்தர்கள் கூடி இருந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!