dinamalar telegram
Advertisement

கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் கட்டும் பணி விறுவிறு

Share
திருத்தணி-வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கொசஸ்தலை ஆற்றின் தற்காலிக பாலம் 60 லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், நெமிலி மற்றும் என்.என்.கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் மீது, கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழையாலும், ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், தரைப்பாலம், 200 மீட்டர் நீளத்திற்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.இதனால், திருத்தணி - நாகலாபுரம் மார்கத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர்.கடந்த மாதம் தற்காலிக தரைப்பாலத்தை மீண்டும் சீரமைப்பதற்கு உயரதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று, இம்மாதம் 2ம் தேதி முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.தற்போது பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:என்.என்.கண்டிகை அருகே ஆற்றின் குறுக்கே உடைந்த தரைப்பாலத்தை, 300 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்திற்கு மணல் மூட்டைகளாலான தற்காலிக தரைப்பாலம் கட்டும் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.கடந்த தரைப்பாலம், 25 பைப்கள் வைத்து கட்டியதால் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால் தற்போது, 50 பைப்கள் வைத்து 60 லட்சம் ரூபாய் மதிப்பில், பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.இப்பணிகள் இந்த வாரத்திற்குள் முடித்து, வாகனங்களின் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement