dinamalar telegram
Advertisement

மனுக்கள் அளிக்க புகார் பெட்டி

Share
திருவள்ளூர்-மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களின் மனுக்களை பெற, கலெக்டர் அலுவலகத்தில், புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், மாதம் தோறும் நடைபெறும், விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.இருப்பினும், பொதுமக்கள் பலர், பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்து தரக்கோரி, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.இவ்வாறு வரும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை, அதிகாரிகள் நேரடியாக சந்தித்து பெற முடியாத நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை இப்பெட்டியில் செலுத்துமாறு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.இப்பெட்டியில் போடப்படும் மனுக்களை, கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, உரிய நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement