dinamalar telegram
Advertisement

காரணீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்

Share
ஊத்துக்கோட்ட--காரணீஸ்வரருக்கு நடந்த 108 சங்காபிஷேக நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.ஊத்துக்கோட்டை அடுத்த, காரணி கிராமத்தில் உள்ளது அபயகாத்யாயினிதேவி சமேத காரணீஸ்வர சுவாமி கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இரண்டாவது கும்பாபிஷேக தினத்தை ஒட்டி, 108 சங்காபிஷேக விழா நடந்தது.காலை 9:00 மணிக்கு, கணபதி பூஜை, புண்யாஹவசனம், பஞ்சகவ்யம், கலச பூஜை மற்றும் சங்கு பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின், பூர்ணாஹூதி தீபாராதனையை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம், கலசாபிஷேக பூஜை, மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement