dinamalar telegram
Advertisement

தொற்று அபாயத்தில் மப்பேடு மக்கள்

Share
மப்பேடு-மப்பேடு ஊராட்சியில், குடியிருப்பு பகுதியில், குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால், பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் முறையாக இல்லை. குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி மனைகளில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது.மேலும், இப்பகுதியில் சாலைகளும் சீரமைக்கப்படாமல் உள்ளதாலும், மாட்டுச் சாணங்களும் கொட்டப்படுவதாலும் துார்நாற்றம் வீசுவதாலும், வாகனங்களில் செல்வோர் மற்றும் பொது மக்களுக்கு டெங்கு, மலேரியாபோன்ற தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், குளம்போல் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றவும், கால்வாயை சீரமைக்கவும்,நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement