dinamalar telegram
Advertisement

குண்ணம்மஞ்சேரி சாலை சேதம்

Share
பொன்னேரி--சாலை சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தில் இருந்து, புதுவாயல் செல்லும் சாலையில், குண்ணம்மஞ்சேரி பஸ் நிலையம் அருகே, சாலை சேதமடைந்து இருக்கிறது.இந்த பகுதியில்தான் பொன்னேரியில் இருந்து ஏலியம்பேடு செல்லும் சாலையும் சந்திக்கிறது. பள்ளங்களால் இந்த இடத்தினை கடக்கும்போது வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இரவு நேரங்களில் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றனர். இதே சாலையில் உள்ள ஆரணி ஆறு பாலத்தின் அருகே, மழை நீர் குளம்போல் தேங்கியும், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன.வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருவதால், குண்ணம்மஞ்சேரி பஸ் நிலையம் அருகே சாலையை சீரமைக்கவும், இணைப்பு சாலை தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement