திருத்தணி நகராட்சியில் ரூ.2 கோடியில் சாலை பணி
திருத்தணி-திருத்தணி நகராட்சியில் சேதமடைந்த தார்ச் சாலைகள், 2 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.திருத்தணி நகராட்சியில், மொத்தம், 21 வார்டுகளில், 193 தெரு மற்றும் சாலைகள் உள்ளன. இந்நிலையில், சேதமடைந்த தார்ச் சாலைகள் சீரமைப்பதற்காக கடந்தாண்டு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, திருத்தணி நகராட்சிக்குட்பட்ட ஆதிசங்கர் நகர், ராஜிவ்காந்தி நகர், ஜெ.ஜெ. நகர் மற்றும் முருகூர் - பாபிரெட்டிபள்ளி உட்பட ௧௦ பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள், கடந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது.தற்போது, தார்ச்சாலைகள் ஜல்லிகற்களை பெயர்த்து புதியதாக தார்ச்சாலை அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.இப்பணிகள், ஒரு மாதத்திற்குள், 10 இடங்களிலும் தார்ச் சாலைகள் புதுப்பிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!