dinamalar telegram
Advertisement

வெள்ளத்தால் சேதமடைந்த சாலை சீரமைக்க நிதிக்காக காத்திருப்பு

Share
திருத்தணி-பருவ மழையால் சேதம்அடைந்த மாநில நெடுஞ்சாலையை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்து நிதிக்காக காத்திருக்கின்றனர்.திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறையினர், மொத்தம், 214 கி.மீ., துாரம் மாநில நெடுஞ்சாலையை பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழை மற்றும் பருவ மழையால் ஏரிகள் நிரம்பியும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகள் சேதம் அடைந்தன.வெள்ளத்தால் நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பருவ மழையால், திருத்தணி தாலுகாவில், மொத்தம், 3 கி.மீ., துாரம் அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. சாலையை சீரமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு சென்னை வட்டார மாநில நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதம் எழுதி உள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்' என்றார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement