மதுரை : கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள்ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்த தமிழக அரசு தமிழகம் முழுவதுமுள்ள நாட்டு காளைகள், பசுக்களைதொடர்ந்து ஆன்லைனில் பதிவு செய்யும் முறை கொண்டு வர வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் உட்பட பிற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் நேரில் முன்பதிவு செய்வது தான் வழக்கம். இந்தாண்டு கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் மதுரையில் காளைகள், வீரர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையைதமிழக அரசு அறிமுகம் செய்தது.மதுரை மாவட்ட நிர்வாக இணையதளத்தில் காளைகள், வீரர்கள் குறித்த தகவல் இ சேவை மையம், பிரவுசிங் சென்டர்கள் வழி பதிவு செய்யப்பட்டது.
இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டிற்கு 6450 காளைகள் பதிவானது.தகுதியில்லா காளைகள் ஆன்லைனிலேயே 'ரிஜக்ட்' செய்யப்பட்டன. இப்பணியில் 15 கால்நடை டாக்டர்கள், 2 தாசில்தார், 10 வி.ஏ.ஓ.,க்கள் ஈடுபட்டனர்.ஆன்லைன் பதிவு, ஒரு ஜல்லிக்கட்டில்பங்கேற்ற காளைகள், வீரர்கள் அடுத்த போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் கூட்ட நெரிசல் குறைந்தது.
திட்டமிட்டபடி பதிவு செய்த காளைகள் அனைத்தும் களமிறங்கின.ஆன்லைன் முறை நல்ல பலன் அளித்ததால் தமிழகம் முழுவதுமுள்ள நாட்டு காளைகள், பசுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை இனிஅரசு தொடர வேண்டும். நாட்டு மாடுகள் வளர்ப்போருக்கு மானியம், சலுகை வழங்க இது பெரிதும் உதவும் என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் உட்பட பிற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் நேரில் முன்பதிவு செய்வது தான் வழக்கம். இந்தாண்டு கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் மதுரையில் காளைகள், வீரர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையைதமிழக அரசு அறிமுகம் செய்தது.மதுரை மாவட்ட நிர்வாக இணையதளத்தில் காளைகள், வீரர்கள் குறித்த தகவல் இ சேவை மையம், பிரவுசிங் சென்டர்கள் வழி பதிவு செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி பதிவு செய்த காளைகள் அனைத்தும் களமிறங்கின.ஆன்லைன் முறை நல்ல பலன் அளித்ததால் தமிழகம் முழுவதுமுள்ள நாட்டு காளைகள், பசுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை இனிஅரசு தொடர வேண்டும். நாட்டு மாடுகள் வளர்ப்போருக்கு மானியம், சலுகை வழங்க இது பெரிதும் உதவும் என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!