தூத்துக்குடி: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் கொள்ளு பேத்தி செல்வி கூறியதாவது: இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் அவர்களின் வரலாறுகளை பற்றி அடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் விழாக்களில் நடைபெறும் அணிவகுப்பின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வரலாறு அடங்கிய வாகன ஊர்திகள் ஆண்டாண்டு காலமாக இடம்பெற்று வருவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் ஆகியோர் இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சுதந்திர போராட்ட வாரிசுகள் மற்றும் தமிழக மக்களையும் உணர்வுகளை வேதனை அடையச் செய்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் ஒன்றிய அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு வ.உ.சி., கொள்ளுபேத்தி கோரிக்கை
வாசகர் கருத்து (17)
என்பதால் ஒன்றிய அரசு இவழும் ஒன்றிய அரசு என சொல்வதால் சேர்க்காதது நியாயமே சேர்க்காததற்கு ஒன்றிய அரசு என்று சொல்லும் கும்பலே காரணம்.
ஒன்றும் புரியாமல் இவர்வேறு வந்து குட்டையை குழப்பி...
இவ்வாறு நடப்பது இது முதல் முதல் முறையல்ல ,நாட்டின் 23 மாநிலங்களில் போன வருடம் அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மட்டுமே பங்கேற்றன இம்முறை தமிழகம் , மேற்கு வணக்கம் இல்லை இதில் தவறொன்றும் கிடையாது , கழகங்கள் குறைசொல்லியே பழக்க பட்டவர்கள் ,ஒரு காரணம் வேண்டும்
Bharathiyar v o c ivargalai periyarists pol depict seithiruppaargalo.
செவிடன் காதில் ஊதிய சங்கு....சங்கி களுக்கு ......கற்பூர வாசனை தெரியாது....