dinamalar telegram
Advertisement

பராமரிப்பின்றி கழிவுநீர் கலக்கும் ஊரணிகள்; ராமநாதபுரம் நகரின் நிலத்தடி நீருக்கு சிக்கல்

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக ஊரணிகள் உள்ளன. இவற்றில் பல ஊரணிகள் பராமரிக்கப்படாமல் செடிகள் வளர்ந்து புதர்மண்டியும், கழிவுநீர் கலந்து பாழாகியுள்ளது. கொசுஉற்பத்தியாகும் மையமாக ஊரணி மாறியுள்ளது.

மாவட்டத்திலுள்ள நான்கு நகராட்சிகளில் ராமநாதபுரம் நகராட்சியில் அதிகபட்சமாக 23 ஊரணிகள் உள்ளன. நகரின் மையப்பகுதியில் சிதம்பரம் ஊரணி, நொச்சிவயல் ஊரணி, முகவை ஊரணி, திரவுபதியம்மன் ஊரணி, பாம்பூரணி, வண்ணா ஊரணி, செம்மாங்குண்டு ஊரணி ஆகியவை நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ளன. இவற்றில் சில ஊரணிகள் பராமரிக்கப்படாமல் புதர்மண்டி முட்செடிகள் வளர்ந்து பாழாகியுள்ளது. குறிப்பாகநகரின் மையப்பகுதியில் வண்டிக்காரத் தெருவில் உள்ள வண்ணா ஊரணி, செம்மாங்குடி ஊரணி ஆகியவற்றில் கழிவுநீர் கலந்தும், குப்பை கொட்டும் இடமாகியுள்ளது. பன்றித்தொல்லையும் உள்ளது.

ராமநாதபுரம் ஊரணிகளை பராமரிக்காத காரணத்தினால், மழைக்காலத்தில் முழுமையாக நீரை சேமிக்க முடியவில்லை. நகரில் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்பட்டு ஆழ்குழாய் தண்ணீரின் உவர்ப்பு தன்மை அதிகரித்துவிடுகிறது.20 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் குடிநீர் எடுக்கவும், குளிக்க, துவைக்க பயன்படுத்திய ஊரணிகளை துார்வாரி கழிவுநீர் கலக்காத வகையில் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக சிதம்பரம்பிள்ளை ஊரணியைப்போல சுற்றி நடைமேடை அமைத்து, மரக்கன்றுகள் நட்டு பூங்கா அமைக்கலாம்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement