dinamalar telegram
Advertisement

ராமநாதபுரத்தில் போஸ்டர்கள் அதிகரிப்பு

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் ரோட்டோரத்தில் விளம்பர பேனர் மற்றும் அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது அதிகரித்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் மையமாக விளங்குவதால் மதுரைரோடு, ராமேஸ்வரம் ரோடு, கிழக்குகடற்கரை சாலை, பஸ் ஸ்டாண்ட் ரோடு ஆகிய பகுதியில் நாளுக்குநாள் வாகனபோக்குவரத்து அதிகரித்துஉள்ளது. இந்தநிலையில், பிளக்ஸ் பேனர், சுவரொட்டிகள் வைப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளை மீறி, அனுமதியின்றி ரோட்டோரத்திலும், சென்டர் மீடியன்களிலும் சுவரொட்டிகளை ஒட்டுவது, பிளஸ் பேனர் வைப்பது அதிகரித்துள்ளது.

மேற்கண்ட நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது பிளக்ஸ் பேனர், சுவரொட்டிகளால் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்க வாய்ப்புள்ளது. நகரில் போக்குவரத்து மிகுந்த ரோட்டோரங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அனுமதியின்றி வைத்து பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டிகளை அகற்ற வேண்டும். ----------
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement