dinamalar telegram
Advertisement

திருக்குறளை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

Share
புதுக்கோட்டை : புதுக்கோட்டை, திருவள்ளுவர் பேரவை, திருக்குறள் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், நேற்று பொங்கல் விழா நடைபெற்றது.இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


அவர் பேசியதாவது:
உரிமை இயல் சார்ந்த பிரச்னைகளையும், குற்றவியல் நடவடிக்கை தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனித்தனி சட்ட விதிமுறைகளை நீதிமன்றங்கள் கடைபிடித்து வருகின்றன.ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய சட்ட நுால் என்று திருக்குறளை கூறலாம். அதனை, வாழ்க்கை நெறிமுறை சட்டம், என்று கூறினாலும் மிகையாகாது.

இவ்வாறு, அவர் பேசினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement