ஊத்துக்கோட்டை, : பிச்சாட்டூர் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்படுவதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஆந்திர மாநிலத்தில் உற்பத்தி ஆகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சேகரிக்கப்படுகிறது.
இதன் மொத்த கொள்ளளவு, 1.85 டி.எம்.சி., நீர் மட்டம், 32 அடி. வறண்ட நிலையில் இருந்த இந்த ஏரிக்கு வடகிழக்குப் பருவ மழை மற்றும் புயல் சின்னங்களால் பெய்த கன மழையால் நீர் மட்டம் உயர்ந்தது.இதன் மொத்த நீர் மட்டமான, 32 அடியை நெருங்கியதால், அங்குள்ள மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது, மழை குறைந்ததால், ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது.நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, ஏரிக்கு, வினாடிக்கு, 150 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. 30.60 அடி. தற்போதைய கொள்ளளவு, 1.79 டி.எம்.சி.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!