திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீநற்கடல் கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று நடக்கும் ஜல்லிக்கட்டு, இன்று அரசு வழிகாட்டுதல்படி துவங்கியது. கலெக்டர் சிவராசு தலைமையில் திருச்சி எஸ்பி சுஜித்குமார், கோட்டாட்சியர் தவச்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பச்சை கொடி அசைத்து ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். 42 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு காளையை கொண்டு வந்த போது, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் (30) என்பவரை மாடு முட்டியது. அதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஆமா.. மெக்சிகோல நடக்கற ஃபுல் ஃபைட் மட்டும் பகுத்தறிவுபடி நடக்குது...