வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி
திருச்சி:திருச்சி மத்திய சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 5-ம் தேதி, கர்நாடக மாநிலம், ஹாசனில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஸ்போர்ட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன், நான்கு வாரம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று காலை 7:30 மணியளவில், திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியை, 10க்கும் மேற்பட்ட கார்களில் காத்திருந்த ஆதரவாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 5-ம் தேதி, கர்நாடக மாநிலம், ஹாசனில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, நேற்று காலை 7:30 மணியளவில், திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியை, 10க்கும் மேற்பட்ட கார்களில் காத்திருந்த ஆதரவாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கோவையில் புகார்
அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, கோவை
மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் அளித்த புகார்:கடந்த 2021ம்
ஆண்டு, கோவை தொண்டாமுத்துாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர்
ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவர்களின் குடும்பத்தை
தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக ராஜேந்திர பாலாஜி பேசினார்.
முன்னாள்
மத்திய அமைச்சர் ராசா மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
குறித்தும் தவறாக பேசினார். இரு மதங்கள் இடையே மோதலை ஏற்படுத்தும்
விதமாகவும் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!