dinamalar telegram
Advertisement

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு வேறு தேதிக்கு மாற்றம்

Share
புதுக்கோட்டை : புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, தி.மு.க., இளைஞரணி சார்பில், நேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.


அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் துாய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கினர். அதன் பின், அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன்விடுதியில், கடந்த 62 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினம் ஊரடங்கு என்பதால், மற்றொரு தேதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும், என்றார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement