கூலிப்படை ஏவி மகனை கொன்ற தாய் கைது
திருச்சி:மண்ணச்சநல்லுார் அருகே, கூலிப்படையை வைத்து மகனை அடித்துக் கொன்ற தாய் உட்பட ஆறு பேரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் அருகே, கன்னியாகுடியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 32; சொந்தமாக லாரி வைத்துள்ளார்.காந்திநகரில் வசித்த இவருக்கு, லோகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டரை வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 8ம் தேதி மாலையில், வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், இரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில், வடக்கு ஈச்சம்பட்டி ஏரியில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சதீஷ்குமார் இறந்து கிடந்தார். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று சதீஷ்குமார், நண்பர்கள் சிலருடன் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்தது.
அதனால், நேற்று முன்தினம்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 19 முதல் 45வயதுள்ள ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த சதீஷ்குமாரை, அவரது தாய் அம்சவல்லியே, 5 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, கொலை செய்ய சொன்னதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, சதீஷ்குமாரின் தாய் அம்சவல்லி உட்பட ஆறு பேரையும், போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் அருகே, கன்னியாகுடியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 32; சொந்தமாக லாரி வைத்துள்ளார்.காந்திநகரில் வசித்த இவருக்கு, லோகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டரை வயதில் பிரபஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.
அதனால், நேற்று முன்தினம்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 19 முதல் 45வயதுள்ள ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த சதீஷ்குமாரை, அவரது தாய் அம்சவல்லியே, 5 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, கொலை செய்ய சொன்னதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, சதீஷ்குமாரின் தாய் அம்சவல்லி உட்பட ஆறு பேரையும், போலீசார் கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!