மயான பாதை ஆக்கிரமிப்பால் பெண் தீக்குளிக்க முயற்சி
புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே அழகம்மாள்புரத்தில், போலி பட்டா தயாரித்து மயான பாதை ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து, ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அழகம்மாள்புரத்தில் உள்ள சத்திரப்பட்டி மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் வழியாக, பூமத்தான்பட்டி, பூவரசகுடி கிராமங்களுக்கான மயான பாதை உள்ளது.சத்திரப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம், 56, என்பவரது நிலத்துக்கு போலி பட்டா தயாரித்து ஆக்கிரமித்த கணேசன், 49, என்பவர், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களையும் மயான பாதையையும் ஆக்கிரமித்து பட்டா போட்டுள்ளார்.
நேற்று அந்த நிலத்திற்கு மின் இணைப்பு எடுக்க முயன்ற போது, கிராம மக்கள் அதை தடுத்து நிறுத்தினர்.இருப்பினும், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மின் இணைப்பு கொடுக்க முயன்றதை கண்டித்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் நிலத்தை பறிகொடுத்த ஒரு பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர்.
'நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு நடைபெற்று வருவதால், தடை ஆணை பெற வேண்டும்.'இல்லாவிட்டால், ஆக்கிரமிப்பாளர் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தாசில்தார் செந்தில்நாயகி கூறியதால், கிராம மக்களிடையே பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அழகம்மாள்புரத்தில் உள்ள சத்திரப்பட்டி மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் வழியாக, பூமத்தான்பட்டி, பூவரசகுடி கிராமங்களுக்கான மயான பாதை உள்ளது.சத்திரப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம், 56, என்பவரது நிலத்துக்கு போலி பட்டா தயாரித்து ஆக்கிரமித்த கணேசன், 49, என்பவர், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களையும் மயான பாதையையும் ஆக்கிரமித்து பட்டா போட்டுள்ளார்.
'நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு நடைபெற்று வருவதால், தடை ஆணை பெற வேண்டும்.'இல்லாவிட்டால், ஆக்கிரமிப்பாளர் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுத்து, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தாசில்தார் செந்தில்நாயகி கூறியதால், கிராம மக்களிடையே பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!