dinamalar telegram
Advertisement

என்.ஐ.டி., கல்லூரி மாணவர் தற்கொலை

Share
திருச்சி : திருச்சி என்.ஐ.டி., கல்லுாரி மாணவர், விடுதியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வங்க தேசத்தைச் சேர்ந்த சவரவ்சன், 23 என்ற மாணவர், திருச்சி என்.ஐ.டி., கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்த அவர், விடுமுறை முடிந்து, 4ம் தேதி கல்லுாரிக்கு வந்தார்.நேற்று முன்தினம், சக மாணவர்கள் வெளியே சென்று மீண்டும் அறைக்கு வந்தபோது, அறை உள்பக்கம் தாழிட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது, சவ்ரவ்சன், மின்விசிறியில் துாக்கு போட்டு இறந்து கிடந்தார். துவாக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement