dinamalar telegram
Advertisement

தாது மணல் கடத்திய லாரி பறிமுதல்: 3 டிரைவர்கள் சிக்கினர்

Share
தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் தாது மணல் குடோனில் இருந்து தாதுமணல் பைகளை வேறு இடத்திற்கு கடத்த முயன்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 3 டிரைவர்கள் சிக்கினர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாது மணல் ஆலைகள் செயல்பட அரசு 2013 ல் தடை விதித்தது. கடற்கரை மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இல்மனைட், சிர்கான், ரூட்டைல் உள்ளிட்ட தாதுமணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரசு தடை விதித்த பிறகும் தாதுமணல் நிறுவனங்கள் தங்கள் குடோனில் இருக்கும் சரக்குகளை வெளியே எடுத்து அனுப்புவது தொடர்கிறது. தூத்துக்குடி அருகே முள்ளக்காடு கடற்கரையில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து தாதுமணல் பைகளை லாரியில் ஏற்றி வெளியே கொண்டு செல்ல முயற்சித்தனர். தகவல் அறிந்த புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி புவியியலாளர் சுகதா ரஹீமா தலைமையில் வருவாய் துறையினர் சென்று லாரி மற்றும் மணல் அள்ளும் இயந்திரம், இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள் ஆறுமுகநேரி லாரன்ஸ் இருதயராஜ், நாகமலை புலியன், திசையன்விளை சுந்தர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இத்தகைய தாது மணல் கடத்தலின் போது வாடகைக்கு வரும் தனியார் லாரிகளின் டிரைவர்கள் சிக்கிக்கொள்கின்றனர். தாதுமணல் உரிமையாளர்கள் மீது எந்த வழக்கு, நடவடிக்கைகள் பாய்வதில்லை. போலீஸ், புவியியல் துறையின் கண் துடைப்பு நடவடிக்கையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாதுமணல் கடத்தல் தொடர்கிறது. படம் மெயிலில் உள்ளது பட விளக்கம்: தூத்துக்குடியில் தனியார் தாது மணல் குடோனில் இருந்து கடத்த முயன்ற பைகள், லாரி சிக்கின.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement