dinamalar telegram
Advertisement

தோட்டா பாய்ந்து இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் கேட்டு மனு

Share
புதுக்கோட்டை : 'தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்,' என்று ஆம் ஆத்மி கட்சியினர், சிறுவர்களுடன் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம், பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், கடந்த 30ம் தேதி, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் தமிழக காவல்துறையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, நார்த்தாமலை அருகே, பாட்டி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி,11, என்ற சிறுவன் தலையில் தோட்டா பாய்ந்ததில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிறுவன் இறப்பு சம்பவம் தொடர்பாக, உரிய நீதி விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த சிறுவன் குடும்பத்திற்கு, தமிழக அரசு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.அவரது குடும்பத்திற்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று, சிறுவர்களுடன் ஊர்வலமாக சென்று, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமுவிடம் மனு அளித்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement