திருச்சி விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி நிறுத்தம்
திருச்சி : திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, தோகா போன்ற நாடுகளுக்கு தினமும் 30 டன் காய்கறிகள், பூ வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று (9ம் தேதி) முதல், சரக்கு ஏற்றுமதி சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும், என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி விமான நிறுவனங்கள், ஏற்றுமதி முகவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, திருச்சி விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில், சரக்குகள் ஏற்றுமதிக்கு முன்பதிவு செய்ய வேண்டாம், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாக காரணங்களால், ஏற்றுமதி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் சேவைகள் தொடங்குவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று (9ம் தேதி) முதல், சரக்கு ஏற்றுமதி சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும், என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி விமான நிறுவனங்கள், ஏற்றுமதி முகவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, திருச்சி விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில், சரக்குகள் ஏற்றுமதிக்கு முன்பதிவு செய்ய வேண்டாம், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!