dinamalar telegram
Advertisement

திருச்செந்தூர் வெறிச்சோடியது

Share
துாத்துக்குடி:தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதியில்லாததால் திருச்செந்துார் கோவில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதையடுத்து திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் வெளியேறினர். திருச்செந்துார் லாட்ஜ்களிலும் பக்தர்கள் தங்க அனுமதியில்லை. இதனால் நேற்று திருச்செந்துார் கோவில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு உள்ளிட்ட பகுதிகள், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 10:00 மணி முதல் காலை 5:00 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் இரவில் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement