4,310 பாட்டில்கள் போலி மது அழிப்பு
திருச்சி:திருச்சியில், போலீசார் பறிமுதல் செய்த 4,310 பாட்டில் போலி மது அழிக்கப் பட்டது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே, தெற்கு இருங்களூரில், கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி, மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். இதில் லாரன்ஸ், 43 என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், 90 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4,310 பாட்டில்கள் போலி மதுவை கைப்பற்றி, லாரன்ஸ் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுவை, தச்சங்குறிச்சி வன பகுதியில், மது விலக்கு டி.எஸ்.பி., முத்தரசு தலைமையில் தரையில் ஊற்றி அழித்தனர்.

250 லிட்டர் சாராயம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைக்கால்- - சிதம்பரம் சாலையில் பூந்தாழை என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்காலில் இருந்து வந்த ஒரு காரை சோதனை செய்தனர். அதில், புதுச்சேரி சாராயம் 250 லிட்டர் இருப்பது தெரியவந்தது. சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்து, கிளமென்ட், 33 என்ற கார் டிரைவரை கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!