dinamalar telegram
Advertisement

விளக்கெண்ணெய் கொடுத்ததால் குழந்தை சாவு: ஐ.ஜி., எச்சரிக்கை

Share
திருச்சி : திருச்சியில், விளக்கெண்ணெய் கொடுத்து, பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவத்தால், மத்திய மண்டல ஐ.ஜி., எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


திருச்சி மாவட்டம், மணச்சநல்லுார் அருகே, அய்யம்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன், சாந்தி தம்பதிக்கு, ஒன்றரை வயதில் பிரதீப் குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது.முசிறி அருகே, முத்தையநல்லுாரில் உள்ள தாய் வீட்டில், கடந்த 20.10.2021ல், சாந்திக்கு, இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. கடந்த 16.11.2021ம் தேதி, சான்விகா என்ற அந்தக் குழந்தைக்கு, இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்துள்ளார்.
அன்று இரவு, திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தண்டலை புத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை, 30.12.2021ல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.இச்சம்பவம் குறித்து, ஜம்பநாதபுரம் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இது குறித்து, நேற்று, மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணன் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், 'உரிய அங்கீகாரம் இல்லாமல், மருத்துவ சிகிச்சை அளித்து அதன் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதோடு, 10 ஆண்டு சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்,' என்று தெரிவித்துள்ளார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement