துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலேயே மரணம்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நேற்று அலுவலகத்திலேயே மரணம் அடைந்தார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன்54, என்பவர் கடந்த எட்டு மாதங்களாக புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் அலுவலக பணி முடிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே தங்கி விடுவார்.நேற்று முன்தினம் இரவு அலுவலக பணி முடிந்து ஒன்றிய குழு தலைவரின் அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையில் துாங்கி உள்ளார்.
நேற்று காலையில் அலுவலக பணியாளர் இசக்கி என்பவர் அவருடைய அறையில் சென்று பார்த்த போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவல்படி சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து சுப்பிரமணியன் உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் அலுவலகத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீசார் அதிகாரிகள் மற்றும் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன்54, என்பவர் கடந்த எட்டு மாதங்களாக புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் அலுவலக பணி முடிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே தங்கி விடுவார்.நேற்று முன்தினம் இரவு அலுவலக பணி முடிந்து ஒன்றிய குழு தலைவரின் அறைக்கு அருகே உள்ள மற்றொரு அறையில் துாங்கி உள்ளார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் அலுவலகத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீசார் அதிகாரிகள் மற்றும் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!