சிறுவன் உயிரிழந்த வழக்கு 54 துப்பாக்கிகள் பறிமுதல்
புதுக்கோட்டை:துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் வெடித்து, சிறுவன் தலையில் பாய்ந்த தோட்டா, தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட 54 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் புகழேந்தி, 11. கடந்த மாதம் 30ம் தேதி, பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெடித்த தோட்டா, தலையில் பாய்ந்ததில் புகழேந்தி உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பாக, இலுப்பூர் ஆர்.டி.ஓ., தண்டாயுதபாணி விசாரணை நடத்தினார்.கலெக்டர் கவிதா ராமுவிடம் நேற்று முன்தினம், விசாரணை அறிக்கையை ஆர்.டி.ஓ., தாக்கல் செய்தார்.
அதில், 'சம்பவத்தன்று பயிற்சி மையத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் சிறுவன் தலையில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா ஆகியவற்றை, தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன்படி, சிறுவன் தலையில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பயிற்சி மையத்தில் 30ம் தேதி, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய 36 துப்பாக்கிகள்; தமிழக போலீசார் பயன்படுத்திய 18 துப்பாக்கிகளை கீரனுார் போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் புகழேந்தி, 11. கடந்த மாதம் 30ம் தேதி, பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெடித்த தோட்டா, தலையில் பாய்ந்ததில் புகழேந்தி உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பாக, இலுப்பூர் ஆர்.டி.ஓ., தண்டாயுதபாணி விசாரணை நடத்தினார்.கலெக்டர் கவிதா ராமுவிடம் நேற்று முன்தினம், விசாரணை அறிக்கையை ஆர்.டி.ஓ., தாக்கல் செய்தார்.
இதன்படி, சிறுவன் தலையில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பயிற்சி மையத்தில் 30ம் தேதி, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய 36 துப்பாக்கிகள்; தமிழக போலீசார் பயன்படுத்திய 18 துப்பாக்கிகளை கீரனுார் போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!