புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், அம்மா கிரைண்டர் மற்றும் மின் விசிறி போன்றவை, பெட்டி பெட்டியாக தேங்கிக் கிடக்கின்றன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அம்மா கிரைண்டர், மிக் ஷி மற்றும் மின் விசிறி போன்றவை வழங்கப்பட்டன. அவை, அந்தந்த மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு லட்சத்து 82 ஆயிரம் பயனாளிகளுக்கு, அம்மா கிரைண்டர், மிக் ஷி, மின் விசிறி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவை முழுமையாக வழங்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, அம்மா கிரைண்டர் மற்றும் மின் விசிறி போன்றவை, புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் மற்றும் மின் விசிறிகள் துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விலையில்லாத இந்தப் பொருட்களை, பயனாளிகளுக்கு முறையாக வழங்காத அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தேங்கி கிடக்கும் கிரைண்டர்கள், மின் விசிறிகளை உரிய பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அம்மா கிரைண்டர், மிக் ஷி மற்றும் மின் விசிறி போன்றவை வழங்கப்பட்டன. அவை, அந்தந்த மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் மற்றும் மின் விசிறிகள் துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விலையில்லாத இந்தப் பொருட்களை, பயனாளிகளுக்கு முறையாக வழங்காத அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தேங்கி கிடக்கும் கிரைண்டர்கள், மின் விசிறிகளை உரிய பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!