ADVERTISEMENT
புதுக்கோட்டை:நார்த்தாமலை அருகே பசுமலைபட்டி பகுதியில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட போது, தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து, பலத்த காயம் அடைந்த சிறுவன், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தி, 11. அதே பகுதியில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன், பள்ளி விடுமுறையில் நார்த்தாமலையில் உள்ள பாட்டி லட்சுமி வீட்டிற்கு சென்றிருந்தான்.

பாட்டி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் துப்பாக்கியில் இருந்து வெளியான ஒரு தோட்டா, சிறுவன் தலையில் பாய்ந்தது.தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள
சிறுவனின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மூளையில் உள்ள நரம்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால், எந்தவித அசைவும் இல்லை எனக் கூறப்படுகிறது.மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!