பொதுமக்களின் ஆதார் விபரங்களை தனியார் நிறுவனங்கள் பெறமுடியாது: தலைமை துணை இயக்குனர் தகவல்
திண்டுக்கல்:'பொதுமக்களின் ஆதார் விபரங்களை பெற தனியார் நிறுவனங்களுக்கு உரிமை கிடையாது' என ஆதார் தலைமை துணை இயக்குனர் கோபாலன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: இந்தியாவில் 99 சதவீதம் பேர் ஆதார் பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் இன்னும் ஆதார் பெறவில்லை.குழந்தைகளுக்கு 'பால ஆதார்'ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க கைரேகை, கண் ரேகை வழங்க தேவையில்லை. பெற்றோருடைய ஆதாரை இணைத்து 'பால ஆதார்' வழங்கப்படுகிறது.
அவர்கள் வளரும் போது 5 வயது, 15 வயது என 2 முறை கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இது முற்றிலும் இலவசம்.இதுதவிர பிற சேவைகளுக்கு ரூ.50 மட்டும் கட்டணம் நிர்ணயித்துள்ளோம். கூடுதல் கட்டணம் வசூலித்த ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய 40 சான்றிதழில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். எந்தச் சான்றிதழும் இல்லாதவர்கள் உயர் அலுவலர்கள், ஊராட்சி தலைவர், எம்.எல்.ஏ.,விடம் சான்றிதழ் பெற்று முகவரியை மாற்றலாம்.
ஆதார் கார்டை தொலைத்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கி அதையே பயன்படுத்தலாம். 'எம்-ஆதார்' முறை அலைபேசி செயலியில் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மையத்தில் ஒரு ஆப்ரேட்டர் குறைந்தது 80 - 100 பேருக்கு ஆதார் பதிவு செய்யலாம்.
தபால்காரர்களுக்கு பயிற்சி டோக்கன் கொடுத்து ஆதார் எடுக்க கூடாது. ஆதாருக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் ஆதார் மையத்தை தேர்வு செய்து 'அப்பாயின்ட்மென்ட்' தேர்வு செய்து ஆதார் எடுக்கலாம். 1,500 தபால்காரர்களுக்கு 'டேப்லெட்' மூலம் குழந்தைகளுக்கு ஆதார் 'அப்டேட்' செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2000 பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். மதுரை, கோவை, திருச்சியில் ஆதார் மையம் துவங்க ஏற்பாடு செய்து வருகிறோம். தனியார் சேவை மையங்கள் புதிதாக ஆதார் பதிவு செய்ய முடியாது.பொது சேவை மையம், வங்கிகள், ஆதார் மையங்களில் மட்டுமே ஆதார் பதிவு செய்ய முடியும். ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் திட்டம் ஒரு சில மாநிலங்களில் சோதனை முறையில் உள்ளது.
வங்கிகள், டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை பெற எங்களிடம் உரிமம் வாங்கியுள்ளனர். வேறு எந்த தனியார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் ஆதார் விபரங்களை பெறக்கூடாது.மீறி கேட்டால் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் கூட முதலில் அரசிதழில் வெளியிட வேண்டும். அப்போதுதான் அரசு தரப்பிலும் ஆதார் விபரங்களை பெறமுடியும். ஆதார் சேவை மையங்களில் மாதம் ஒருமுறை வீதம் ஆண்டுக்கு 12 முறை இலவசமாக ஆதார் பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: இந்தியாவில் 99 சதவீதம் பேர் ஆதார் பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் இன்னும் ஆதார் பெறவில்லை.குழந்தைகளுக்கு 'பால ஆதார்'ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க கைரேகை, கண் ரேகை வழங்க தேவையில்லை. பெற்றோருடைய ஆதாரை இணைத்து 'பால ஆதார்' வழங்கப்படுகிறது.
ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய 40 சான்றிதழில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். எந்தச் சான்றிதழும் இல்லாதவர்கள் உயர் அலுவலர்கள், ஊராட்சி தலைவர், எம்.எல்.ஏ.,விடம் சான்றிதழ் பெற்று முகவரியை மாற்றலாம்.
ஆதார் கார்டை தொலைத்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கி அதையே பயன்படுத்தலாம். 'எம்-ஆதார்' முறை அலைபேசி செயலியில் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மையத்தில் ஒரு ஆப்ரேட்டர் குறைந்தது 80 - 100 பேருக்கு ஆதார் பதிவு செய்யலாம்.
தபால்காரர்களுக்கு பயிற்சி டோக்கன் கொடுத்து ஆதார் எடுக்க கூடாது. ஆதாருக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் ஆதார் மையத்தை தேர்வு செய்து 'அப்பாயின்ட்மென்ட்' தேர்வு செய்து ஆதார் எடுக்கலாம். 1,500 தபால்காரர்களுக்கு 'டேப்லெட்' மூலம் குழந்தைகளுக்கு ஆதார் 'அப்டேட்' செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2000 பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். மதுரை, கோவை, திருச்சியில் ஆதார் மையம் துவங்க ஏற்பாடு செய்து வருகிறோம். தனியார் சேவை மையங்கள் புதிதாக ஆதார் பதிவு செய்ய முடியாது.பொது சேவை மையம், வங்கிகள், ஆதார் மையங்களில் மட்டுமே ஆதார் பதிவு செய்ய முடியும். ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் திட்டம் ஒரு சில மாநிலங்களில் சோதனை முறையில் உள்ளது.
வங்கிகள், டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை பெற எங்களிடம் உரிமம் வாங்கியுள்ளனர். வேறு எந்த தனியார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் ஆதார் விபரங்களை பெறக்கூடாது.மீறி கேட்டால் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் கூட முதலில் அரசிதழில் வெளியிட வேண்டும். அப்போதுதான் அரசு தரப்பிலும் ஆதார் விபரங்களை பெறமுடியும். ஆதார் சேவை மையங்களில் மாதம் ஒருமுறை வீதம் ஆண்டுக்கு 12 முறை இலவசமாக ஆதார் பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!