புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
பரிசோதனை செய்த புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர்கள், சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், சிறுவன் புகழேந்தி தலையில் இருந்த தோட்டாவை அகற்றி, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சாலை மறியல்
இப்பகுதியில், அடிக்கடிஇது போன்ற சம்பவம் நடைபெறுவதாக கூறி, பொதுமக்கள் நேற்று, புதுக்கோட்டை -- திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை, தற்காலிகமாக மூடும்படி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டு உள்ளதாக, ஆர்.டி.ஓ., பொதுமக்களிடம் தெரிவித்தார். சாலை மறியல் கைவிடப்பட்டது.
சிறுவன் மீது தோட்டா பாய்ந்தது தொடர்பாக, நிபுணர் குழு விசாரணை நடத்த உள்ளது என்று மாவட்ட எஸ்.பி., நிஷாபார்த்திபன் கூறினார். தொடர் சம்பவம்கடந்த 2001ல், விளத்துப்பட்டி ஊராட்சி செயலர் முருகேசன்,45, என்பவர் மீது தோட்டா பாய்ந்தது.
ஆறு மாதத்திற்கு முன் நார்த்தமலை பகுதியை சேர்ந்த லெட்சுமி, 15, என்ற சிறுமி மீது தோட்டா பாய்ந்து இருவரும் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன்பின், 20 நாட்களுக்கு முன், இப்பகுதியில் சின்னபொண்ணு, 50, என்பவர் வீட்டின் 'ஆஸ்பெட்டாஸ்' சீட்டில் தோட்டா பாய்ந்ததை, போலீசாரிடம் தெரிவித்தார். அந்த தோட்டாவை போலீசார் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
அந்த சிறுவன் குணமடையவேண்டும் ,இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டு பாய்ந்த துப்பாக்கியை கண்டுபிடிக்கவும் .உலக அதிசயம் என்று நினைக்கிறன் .