dinamalar telegram
Advertisement

தனியார் நிறுவனத்தை மிரட்டினாரா தி.மு.க., எம்.எல்.ஏ.,?

Share
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள புங்கவர்நத்தம், ஆத்திக்கிணறு, முள்ளுப்பட்டி, சோழபுரம், ஈராச்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், ஜி.ஆர்.டி., நிறுவனம் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், ஜி.ஆர்.டி., நிறுவனம் 400 ஏக்கர் நிலங்களை போலி பட்டா வாயிலாக கையகப்படுத்தி உள்ளதாகவும், விவசாய நிலங்களை கைப்பற்றி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. மேலும், 'சோலார் பேனல் அமைக்க அரசிடம் முன்அனுமதி பெறவில்லை. நீர் வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து சேதப்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன' என்று, ஆளும் கட்சியினர் சிலர் கொந்தளித்தனர்.

இதைத் தொடர்ந்து, விளாத்திகுளம் தி.மு.க., --எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பொம்மையாபுரம் -- போடுபட்டி இடையில் உள்ள பகுதியில் நடந்து வந்த சோலார் பேனல் அமைக்கும் பணிகளை நிறுத்த வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர்; இதனால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து, சோழபுரம் விவசாயி வீராசாமி கூறியதாவது:இந்த பகுதியே வானம் பார்த்த பூமி தான். அதனால் தான், இங்கு பலர் காற்றாலை மின் நிலையம் அமைத்து வருகின்றனர். சென்னையை சேர்ந்த ஜி.ஆர்.டி., நிறுவனம், இந்த பகுதியில் 200 ஏக்கர் இடத்தை, முறைப்படி உரிய விலை கொடுத்து வாங்கியது. அங்கே சூரிய மின்சக்தி தயாரிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்த, அரசிடம் முறையாக அனுமதியும் பெற்றது.இருந்த போதும், அந்த இடங்களின் குறுக்கே நீர் போக்குவரத்துக்கான இடங்களும் இருந்தன.

கட்டமைப்புகளை ஏற்படுத்த, தனியார் நிறுவனம் பணிகளை துவக்கியது. அப்போது நீர் நிலை போக்குவரத்து பகுதிகள் சில துார்ந்து போயின. உடனே, விவசாயிகள் சிலர், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்; அதன்பின், எந்தப் பிரச்னையும் இல்லை.தனியார் நிறுவனத்திற்கு எதிராக சிலர், எம்.எல்.ஏ.,வை உசுப்பி விட்டனர். தேவையில்லாமல் களம் இறங்கி விட்டதை உணர்ந்து, எம்.எல்.ஏ.,வும் தற்போது பின்வாங்கி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

'எந்த பேரமும் பேசவில்லை!'
தனியார் நிறுவனம், அரசிடம் உரிய அனுமதி பெற்று தான், சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தை கட்டமைக்கும் பணியில் இருக்கிறது.நீர் நிலைகளும், நீர் போக்குவரத்து வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் சென்று, பணிகளை நிறுத்த சத்தம் போட்டேன். நிறுவனம் சார்பில் பேசினர். ஆக்கிரமிப்புகளை அகற்றியும் விட்டனர். மொத்தத்தில் பிரச்னை முடிந்து விட்டது. ஆனால், இதை பலரும் பெரிதுபடுத்தி, எனக்கு சிக்கலை ஏற்படுத்த பார்க்கின்றனர். இந்த விஷயத்தில், எந்த பேரமும் பேசவில்லை. அதேபோல, கட்சி தலைமை, ஆட்சி மேலிடத்தில் இருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை; அவர்கள் எதுவும் பேசவும் இல்லை.
- மார்கண்டேயன்,
விளாத்திகுளம் தி.மு.க., -- எம்.எல்.ஏ.,

'பின்னணி தெரியவில்லை'நீர் வழித்தட ஆக்கிரமிப்பு என, சில ஊர்களில் இருக்கும் விவசாயிகள் புகார் அளித்ததன் காரணமாக, வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அதை சரி செய்து விட்டனர். அதன்பின், எந்த பிரச்னையும் இல்லை.தற்போது, மீண்டும் பிரச்னை துவங்கியதன் பின்னணி தெரியவில்லை. ஆனாலும், பிரச்னை சுமூகமாக முடிக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம்.
-- மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • ராஜா -

  பெட்டி வந்துருச்சு...போய் வேலைய பாருங்க...

 • Sankaran Natarajan - chennai,இந்தியா

  தினமலர் வாசகர்கள் சார்பாக அந்தப் பகுதியில் அடிக்கடி பார்வையிட்டு வேலைகள் நடக்கிறதா அல்லது முடக்கப்பட்டததா என்று உறுதி செய்யவும்.

 • Sankaran Natarajan - chennai,இந்தியா

  எல்லாம் சுமுகமாக முடிந்தது. என்ன.... புரிஞ்சிருச்சா?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  திடீர் என்று கிளம்பும் சமூக காலங்கள் வேலையாக இருக்கும். வைகோ வை எங்கே காணோம்? மிஸோநரிக்கு இப்போர் பிரச்சனைகள் கிளம்பி உள்ளான. திருட்டுத்தனம் முன்னை போல் செய்யமுடியாமல் மத்தியில் கிடுக்கி பிடி போட்டுள்ளனர். அது தான் காரணமா?

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  பாம்பு கொத்திச்சா என்று இதென்ன கேள்வி? அதனுடைய இயல்பே அதுதானே ?

Advertisement