கார் மோதி சிறுமி பலி
தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே ராஜபதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய மகேஷ் 35. ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷன் போலீஸ். ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு நடை பயிற்சிக்கு மிருதுளா பார்கவி 9, உடன் சென்றார்.
காயல்பட்டனம் புறவழிச் சாலையில் சென்ற போது, திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வந்த ஐயப்ப பக்தர்களின் கார் தந்தை, மகள் மீது மோதியது. இருவரும் காயமுற்றனர்.ஐயப்ப பக்தர்களின் காரில் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிருதுளா பார்கவி இறந்துவிட்டார். சுப்பிரமணிய மகேஷ் சிகிச்சையில் உள்ளார். ஆறுமுகநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!