dinamalar telegram
Advertisement

குண்டாசில் நால்வர் கைது

Share
துாத்துக்குடி : சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான பெண் உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளையில் நவ.21ல் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில் மாரியம்மாள் 46, கணவர் பண்டார சாமி 48, மாடசாமி 44 , கைது செய்யப்பட்டனர். இதேபோல எட்டயபுரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தோஷ் 22, கைது செய்யப்பட்டார். இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி குண்டாஸ் பாய்ந்தது. துத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 195 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதை பொருள் விற்பனை செய்தவர்கள் 22 பேர் ஆவர் என எஸ்.பி., தெரிவித்தார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement