நாகர்கோவில்:குளச்சல் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 50 படகுகள் ஏராளமான மீன்களுடன் கரை திரும்பியதால் மார்க்கெட்டில் மீன்கள் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்கிறது. அவற்றில் நேற்று காலை 50 படகுகள் ஒரே நேரத்தில் திரும்பியது. இந்தப் படகுகளில் இறால், கணவாய் மற்றும் கிளி மீன்கள் அதிகமாக இருந்தன.இவை கடற்கரை ஏல மார்க்கெட்டில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
தமிழகம் மற்றும் கேரள வியாபாரிகள் இவற்றை வாங்கி சென்றாலும் உரிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் ஆதங்கப்பட்டனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!