எஸ்.ஐ.,மீது பாலியல் புகார் பெண் குண்டுகட்டாக அகற்றம்
நாகர்கோவில் : பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ., மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்ணை பெண் போலீசார் குண்டு கட்டாக துாக்கி அகற்றினர்.
@@கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேககோட்டை சேர்ந்த 32 வயது பெண், பளுகல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்ற போது அங்குள்ள எஸ்.ஐ., சுந்தரலிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுந்தரலிங்கம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதையடுத்து குழித்துறை நீதிமன்றத்தில் சுந்தரலிங்கத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய பெண் உத்தரவு பெற்றார். ஆனால் உரிய பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியும், சுந்தரலிங்கத்தை கைது செய்ய கோரியும் அப்பெண் நேற்று எஸ். பி., அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் அவரை குண்டுகட்டாக துாக்கி சென்றனர். இந்நிலையில் அவர் பளுகல் போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்கப் போவதாக கூறியுள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!