யானைகள் இறப்பதை தடுக்க மத்திய அரசால் தான் முடியும்
நாகர்கோவில்:''தமிழக காடுகளில் யானைகள் உயிரிழப்தை தடுக்க, மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.நாகர்கோவிலில் நேற்று அவர் கூறியதாவது:அரசு ரப்பர் கழகம் கடந்த ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கியது. தற்போது லாபமும், நஷ்டமும் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். ரப்பர் கழகத்தை லாபகரமாக மாற்ற, தொழிலாளர்களால் மட்டுமே முடியும். அவர்களின் சம்பள உயர்வு பிரச்னை, முத்தரப்பு பேச்சு வாயிலாக முடிவுக்கு கொண்டு வரப்படும்.ஏற்கனவே மத்திய அரசு போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான், இலங்கை தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர். தமிழக காடுகளில் யானைகள் இறப்பதை தடுக்க, மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!