dinamalar telegram
Advertisement

தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் வெடித்து சிதறிய பட்டாசுகள்

Share
நாகர்கோவில்:குமரி மாவட்டம் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததால் சுவர்களில் விரிசல் விழுந்தது கூரை சேதமானது.
தீபாவாளியின் போது அனுமதி இல்லாமல் பல இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை தக்கலை போலீஸ் ஸ்டேஷனிலும் மொட்டை மாடியில் பிளாஸ்டிக் ஷீட் கூரையின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் திடீரென அந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தது.
போலீசார் வெளியே ஓடினார். தக்கலை தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எஸ்பி. பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.இதில் கூரை சேதமானதோடு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement