dinamalar telegram
Advertisement

சர்வாதிகார போக்குடன் மத்திய அரசு: முத்தரசன்

Share
நாகர்கோவில்:''வேளாண் சட்டம் கொண்டு வந்ததிலும், அதை திரும்ப பெற்றதிலும் மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் நடந்துள்ளது,'' என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்போதே அல்லது திரும்பப் பெறும்போதோ அதற்குரிய விவாதங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விவசாயத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்களையும் கொண்டு வந்த போதும் அதை தற்போது திரும்ப பெற்ற போதும் எவ்வித விவாதத்தையும் நடத்த முன்வரவில்லை.இது மோடி அரசின் சர்வாதிகாரப்போக்கை காட்டுகிறது.

அதேபோன்று மின்சார திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது. மாநில உரிமைகளைப் பறிக்கும் இதனை கொண்டு வரக்கூடாது. நவீன வசதிகளைக் கொண்ட எந்தவித இயற்கை இடர்பாடுகளை சமாளிக்கும் சக்தி வாய்ந்ததாக கூறப்பட்ட ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி சென்றபோது ஏற்பட்ட விபத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இது இயல்பான விபத்தா அல்லது சதியா என முழு விசாரணைக்கு பின்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது, என்றார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement