சபரிமலையில் கட்டுப்பாடுகள் பொன் ராதாகிருஷ்ணன் காட்டம்
நாகர்கோவில்:''சபரிமலை, கேரள மாநிலத்துக்கு மட்டும் சொந்தம் அல்ல. நெய் அபிஷேகம் போன்ற சடங்குகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி:உ.பி., மாநிலத்தில் உள்ள காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1813 முதல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான், அங்கு பூஜை, சடங்குகளை செய்து வருகின்றனர். மோடி ஆட்சியில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, டிசம்பர் 13ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
இந்த நாளில், அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, காசி விஸ்வநாதரை வழிபட வேண்டும். கொரோனா பிரச்னையால், சபரிமலையில் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. சபரிமலை கேரளத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நெய் அபிஷேகம் போன்றவற்றுக்கு அனுமதி வழங்குவது பற்றி, முதல்வர் பினராயி விஜயன் பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி:உ.பி., மாநிலத்தில் உள்ள காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1813 முதல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான், அங்கு பூஜை, சடங்குகளை செய்து வருகின்றனர். மோடி ஆட்சியில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, டிசம்பர் 13ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!