dinamalar telegram
Advertisement

அரசு பஸ்களில் விபரீத பயணம்; மாணவர்களுக்கு போலீஸ் அறிவுரை

ஊத்துக்கோட்டை : திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பஸ்களில் விபரீத முறையில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த மாணவர்களை போலீசார் பிடித்து அறிவுரை வழங்கி, வீட்டுக்கு அனுப்பினர்.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, மெய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.

மெய்யூர், வேம்பேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க செல்கின்றனர்.நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து மாணவர்கள் சிலர், திருவள்ளூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருவள்ளூர் - மெய்யூர் இடையே இயக்கப்படும் பஸ்சில் பயணம் செய்தனர்.வேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த, பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், பஸ்சில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தது,


சக பயணியரை அதிர்ச்சி அடையச் செய்தது.இது குறித்து கேட்ட பஸ் நடத்துனரை, அந்த மாணவர் மதிக்காமல் பேசியதாக தெரிகிறது.மாணவரின் விபரீத செயல் படம்பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதை பார்த்த பெரியபாளையம் போலீஸ் ஆய்வாளர் தரணீஸ்வரி, மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை அழைத்து பேசினர். 'ஆபத்தான முறையில் பயணம் செய்வது உயிருக்கு கேடானது.


இது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' என அறிவுரை கூறி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.இதேபோல் கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை பகுதியில், பஸ் ஏணியில் ஆபத்தாக பயணித்த மாணவருக்கு, போக்குவரத்து துறை இணை ஆணையர் ரவிசந்திரன், பள்ளிக்கு நேரில் சென்று அறிவுரை வழங்கினார்.அரசு பஸ்களில் விபரீத செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, சமூக ஒழுக்கம் குறித்து, கல்வித் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement