dinamalar telegram
Advertisement

மழை விட்டும் வடியாத தண்ணீர்; பொன்னேரியில் மோட்டார் மூலம் அகற்றம்

Share
பொன்னேரி : மழை விட்டும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடியாத நிலையில், பேரூராட்சி நிர்வாகம் மோட்டார்கள் மூலம் அவற்றை வெளியேற்றி வருகின்றன.தொடர் மழையால் பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மூகாம்பிகை நகர், மதினா பள்ளிவாசல் தெரு, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில், மழை நீர் சூழ்ந்தது.


@@அங்குள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால், அப்பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மழை விட்டு, ஒரு வாரம் முடிந்தும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வெளியேறாமல் இருந்தது. அதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் மோட்டார்கள் மூலம், அவற்றை வெளியேற்றி வருகின்றன.டீசல் மோட்டார்களை பொருத்தி, குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, மழை நீர் கால்வாய்கள் வழியாக ஆரணி ஆற்றிற்கு கொண்டு செல்லும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.அடுத்த மூன்று தினங்களுக்குள் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர் முழுதுமாக வெளியேற்றப்பட்டுவிடும் என, பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement