குடியிருப்பு பகுதியில் வடியாத மழை நீர்
செவ்வாப்பேட்டை : செவ்வாப்பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் வடியாததால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டை ஊராட்சியில், கே.டி.ஜே. நகர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.
@@இதில், கே.டி.ஜே. நகர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், சில தினங்களாக பெய்த மழையால், நீர் வெளியேறாமல் கழிவு நீருடன் கலந்து குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது.இதனால் பொதுமக்கள வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு மழை நீர், கழிவு நீருடன் கலந்து தேங்கியிருப்பதால் மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் மழை நீரை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ''செவ்வாப்பேடடை ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து மழை நீரை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!