dinamalar telegram
Advertisement

வெள்ளத்தில் சிக்கிய பள்ளி வேன்:மாணவர்கள் மீட்பு

Share
கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி செய்யாமங்களம் அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் வெள்ளத்தில் சிக்கியது. கிராமத்தினர் மீட்டனர்.

வைகை அணையின் உபரிநீர் பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து பரளையாற்றுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. செய்யாமங்களம்- கொடுமலுார் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் செல்கிறது.

நேற்று தண்ணீர் வரத்து குறைவாக காணப்பட்டது.இதனையடுத்து கமுதி அருகே உள்ள தனியார் பள்ளி வேன் தரைப்பாலத்தை கடக்க முயன்றது. அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தண்ணீரில் வேன் சிக்கியது. வேனில் இருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அலறினர். செய்யாமங்களம் கிராமத்தினர் பள்ளி மாணவர்களையும், வேனையும் மீட்டனர். இவ்வழியாக வாகனங்கள் செல்வது தடுக்கப்பட்டு வருவாய்த் துறையினர்,போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement