dinamalar telegram
Advertisement

ராமேஸ்வரத்தில் பல மாதங்களாக மூடி கிடக்கும் மீன்துறை கட்டடம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இரு ஆண்டுகளாக மீன்துறை அலுவலக கட்டடம் மூடி கிடப்பதால், பலவீனமாகும் நிலை உள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன்உள்ளிட்ட பகுதியில் 980 விசைப்படகுகள், 450 நாட்டுப்படகில் 20 ஆயிரம் மீனவர்கள், 10 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் அடையாள அட்டை, படகுகளின் ஆர்.சி.,புத்தகம் பராமரிப்பு, மீனவர் நலன் பாதுகாத்திட ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலக முதல் மாடியில் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.

பல ஆண்டுகளாக மீன்துறைக்கு சொந்தமாக அலுவலக கட்டடம் இல்லாததால், 3 ஆண்டுக்கு முன் தமிழக அரசு ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் அதிகாரிகள் குடியிருப்புடன் புதிய அலுவலகத்திற்கு கட்டடம் அமைத்தனர். பணி முடிந்து இரு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடப்பதால் பலவீனமாகும் அபாயம் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement