dinamalar telegram
Advertisement

விபத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய சரக்கு வாகனம்

Share
ஓசூர்: அஞ்செட்டி அருகே, மலைப்பாதையில் விபத்தில் சிக்கி, அந்தரத்தில் தொங்கிய வாகனத்திலிருந்து டிரைவர் உயிர் தப்பினார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் சிவன் என்ற பெயரில், தனியார் பாரத் காஸ் ஏஜன்சி நிறுவனம் இயங்குகிறது. அங்கிருந்து, நேற்று காலை சிலிண்டர்களை ஏற்றிய சரக்கு வாகனம் உரிகத்திற்கு சென்றது. அங்கு சிலிண்டர்களை இறக்கி விட்டு, காலி சிலிண்டர்களுடன், மீண்டும் அஞ்செட்டி திரும்பியது. வாகனத்தை டிரைவர் சிவா, 35, ஓட்டினார். உரிகம் - தக்கட்டி இடையே மலைப்பாதையிலுள்ள கொண்டை ஊசி வளைவில் காலை, 11:00 மணிக்கு சென்றபோது, வாகனத்தின் ஸ்டேரிங் லாக்கானது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி, முன்பக்க இரு டயர்கள் கழன்று, 40 அடி பள்ளத்தில் வாகனத்தின் முன் பாதி அந்தரத்தில் தொங்கியது. வாகனத்திலிருந்து வெளியேறி டிரைவர் சிவா உயிர் தப்பினார். பொக்லைன் வாகன உதவியோடு வாகனம் மீட்கப்பட்டது. அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement