dinamalar telegram
Advertisement

தீக்காயத்தால் பாதித்த மகனை கருணை கொலை செய்ய தாய் மனு

Share
கிருஷ்ணகிரி: மகனை கருணை கொலை செய்யக்கோரி, குடும்பத்தினருடன் வந்த தாய், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், வள்ளுவர்புரத்தை சேர்ந்த சரவணன் - சத்யஜோதி தம்பதிகளாகிய எங்களுக்கு, 15, 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் எலத்தகிரியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கின்றனர். எங்களது இளைய மகன் கடந்த ஏப்., 15ல் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் விளையாடியபோது, விறகு அடுப்பில் இருந்த தீ பட்டு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தும் குணமாகாமலும், நடக்க முடியாமல் தவிக்கிறார். கூலிவேலை பார்க்கும் எங்களால், மருத்துவ செலவிற்கு பணமின்றியும், மகன் படும் கஷ்டத்தையும் பார்க்க முடியவில்லை. எனவே, அவரை கருணை கொலை செய்ய, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை பெற்ற கலெக்டர், அரசு சார்பில் உரிய சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, சுகாதாரத்துறை அலுவலர்களிடம் மனுவை வழங்கி, உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement