dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Share
கிருஷ்ணகிரி: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் தலைமையில், கிருஷ்ணகிரி ஐந்துரோடு ரவுண்டானா பகுதியில், அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* ஊத்தங்கரையில், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்அமீது, நகர செயலாளர் சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


* பாப்பிரெட்டிப்பட்டி கடத்தூர் ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், விஸ்வநாதன் தலைமையில் பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசு, வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


* மத்தூரில் நடந்த நிகழ்ச்சியில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement