dinamalar telegram
Advertisement

வீடுகளில் காய்கறி தோட்டம்அமைக்க மானியத்தில் கிட்

திண்டுக்கல் : 'மாடித்தோட்டம், காய்கறி, ஊட்டச்சத்து தளைகள் மானிய விலையில் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: வீடு, மாடி தோட்டத்தில் காய்கறி, மூலிகளை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்க காய்கறி தோட்டம், ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.நகர் பகுதிகளில் தோட்டம் அமைக்க 6 வகை காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள்- 6, இரண்டு கிலோ தென்னை நார் கட்டிகள்- 6, உயிர் உரங்கள் 400 கிராம், உயிரி கட்டுப்பாடு காரணிகள் 200 கிராம், இயற்கை பூச்சி கொல்லி மருந்து 100 மி.லி., சாகுபடி

முறைகளை விளக்கும் கையேடு அடங்கிய மாடித்தோட்ட தளைகள் மானியத்தில் ரூ.225க்கு வழங்கப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சமாக 2 மட்டுமே வழங்கப்படும். ஊரக பகுதிகளில் தோட்டம் அமைக்க கத்தரி, மிளகாய், வெண்டை, முருங்கை, சாம்பல் பூசணி, கீரைகள் உட்பட 12 வகையான விதைகள் ரூ.15 க்கு வழங்கப்படும். ஒருவருக்கு 2 விதை தொகுப்புகள் வழங்கப்படும்.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, ஊட்டச்சத்து பெற பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, புதினா, சோற்று கற்றாழை செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகள் ரூ.25 க்கு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://tnhorticulture.tn.gov.in/kitல் விண்ணப்பிக்கலாம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement